Tuesday, April 4, 2017

[Music] Krishna Janardhana... | Shri. R. Vinayakam | Ramesh Vinayakam | ...

Wednesday, March 1, 2017

குடமுழுக்கு அல்லது கும்பாபிசேகம் (கும்பாபிஷேகம்)

ஒவ்வொரு இந்து கோவிலிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஒரு சடங்காகும்.[குடத்தில் நீர்நிரப்பி புனித ஆறுகளின் நீராக உருவகித்து மந்திரங்களினால் தெய்வத்தன்மை ஏற்றப்பட்ட நீரினால் சிலைகளும் கோபுரத்தின் உச்சியிலிருக்கும் கலசங்களும் நீராட்டப்படுவதால் இது குடமுழுக்கு என்று அழைக்கப்படுகிறது. 


கும்பாபிஷேகத்தின் வகைகள்

கும்பாபிஷேகம் 4 வகைப்படும் 
1.ஆவர்த்தம் 
2.அனாவர்த்தம்
3.புனராவர்த்தம்
4.அந்தரிதம்

1.ஆவர்த்தம் 
புதிதாக அமைந்த ஆலயத்தில் மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது 

2.அனாவர்த்தம்
சிதிலமடைந்த கோயிலை புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது 

3.புனராவர்த்தம்
கோயில் பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

4.அந்தரிதம்
கோயிலுக்குள் தகாத விஷயங்கள் நடந்ததா பொருட்டு கும்பாபிஷேகம் செய்வது 

குண்டங்களின் எண்ணிக்கை

ஏக குண்டம் – ஒரு குண்டம்
பஞ்சாக்னி – ஐந்து குண்டம் 
நவாக்னி – ஒன்பது குண்டம்
உத்தம பக்ஷம் – முப்பத்திமூன்று குண்டம்  

மேற்கொள்ளப்படும் கிரியைகள் 1. அனுஞை – {அனுமதி வாங்குதல்} செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.
 2. சங்கல்பம் – இறைவனிட்த்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.
 3. பாத்திர பூஜை – இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜா பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்குலுக்குறிய தேவதைகளை பூஜை செய்தல்.
 4. கணபதி பூஜை – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.
 5. வருண பூஜை – அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.
 6. பஞ்ச கவ்யம் – ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால்,தயிர்,நெய்,பசுநீர்,பசுசானம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.
 7. வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.
 8. பிரவேச பலி – எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செயிதல் {துர் தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு}
 9. மிருத்சங்கிரஹணம் – {மண் எடுத்தல்} அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில்ருந்து மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.{ ஆலயம் நிர்மாணம் செய்ய பூமி தாயான பூமா தேவியை கஷ்ட படுத்தினதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்க செய்யப்படும் கிரியை}
 10. அங்குரார்ப்பணம் – {முளையிடுதல்} எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை வளர செய்தல். இதில் 12 சூர்யர்கலான வைகர்த்தன்,விவஸ்வதன்,மார்த்தாண்டன்,பாஸ்கரன்,ரவி,லோகபிரகாசன்,லோகசாட்சி,திரிவிக்ரமன்,ஆதித்யன்,சூரியன்,அம்சுமாலி,திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.
 11. ரக்ஷாபந்தனம் – {காப்புக்கட்டுதல்} கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும் செய்யும் கர்த்தாவுக்கும்எவ்வித இடையூறுகள் வராதபடிக் காத்தற் பொருட்டு. அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு {கயிறு} கட்டுதல்.
 12. கும்பலங்காரம் – கும்பங்களை {கலசம்} இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.
 13. கலா கர்ஷ்ணம் – {சக்தி அழைத்தல்} விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தல்.
 14. யாகசாலா பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.
 15. சூர்ய,சோம பூஜை – யாகசாலையில் சூர்ய சந்திரனை வழிபடுதல்.
 16. மண்டப பூஜை – அமைக்க பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.
 17. பிம்ப சுத்தி – விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.
 18. நாடி சந்தானம் – யாகசாலை இட்த்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல். { இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இனைப்பு மூலமாக விக்ரஹங்களுக்கு கொண்டு சேர்த்தல்}
 19. விசேஷ சந்தி - 36 தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கு அர்க்யம் தருவது.
 20. பூத சுத்தி – இந்த பூத {மனித} உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.
 21. ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்குகொண்டு சேர்த்தல்.
 22. அஷ்ட பந்தனம் – எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீட்த்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பர்.
 23. பூர்ணாஹுதி – யாகத்தை பூர்த்தி செய்தல்.
 24. கும்பாபிஷேகம் – {குடமுழுக்கு} யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.
 25. மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.
 26. மண்டலாபிஷேகம் – பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 48.நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.

Monday, February 27, 2017

இறைவனுக்கு தெரியும் !


ஒரு 8 வயதுள்ள சிறுமி தயங்கி தயங்கி அந்த மருந்துக் கடையை நெருங்கினாள்.

கடைக்காரர் வேறு ஒருவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார்.

அங்கிள்... அங்கிள்....
என்னம்மா?????  கடைக்காரர் பரிவுடன் கேட்டார்....
அண்ணனுக்கு உடம்பு சரியில்லை.... மருந்து வேணும்.... திக்கி...திக்கிய படியே கண்களில் கண்ணீருடன் சொன்னாள்
prescription கொண்டுவந்தாயா  குழந்தை????
அந்த குழந்தை ஒன்றும் தெரியாமல் முழித்தது....  அப்படின்னா????
எங்கிட்ட காசு இருக்கு.... என்றபடியே தன் பைக்குள் கையை விட்டு அந்த மண் உண்டியலை எடுத்து டேபிள் மேல் வைத்தாள்.
"காசு பத்தலைன்னா நான் வீட்டுக்கு போய் வேற காசும் கொண்டு வர்ரேன் அங்கிள், மருந்து குடுங்க அங்கிள். இந்த மருந்து குடுத்தா என்னோட அண்ணனுக்கு உடம்பு சரியாயிரும்.... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகைக்கு தயார் ஆனது.
சரிமா அழாதே.... மருந்து பேர் என்ன?????
குழந்தை மென்று விழுங்கி சொன்னது

" மெரிக்கள்"
கடைக்காரர்க்கு ஒன்றும் புரியவில்லை... மீண்டும் கேட்டார்.
நல்லா ஞாபக படுத்தி சொல்லுமா... என்ன மருந்து பேரு?????

மெரிக்கள் அங்கிள்...
அப்படி ஒரு மருந்தே இல்லையேம்ம்மா... ஆமா உனக்கு யார் இந்த மருந்து பேரை சொன்னது?????

குழந்தை கண்ணீருடன் சொன்னது....

டாக்டர் அம்மா அப்பா கிட்ட பேசிட்டு இருக்கும் போது நான் கேட்டேன். இந்த மருந்து இருந்தா தான் அண்ணன் பிழைக்க முடியுமாமா அங்கிள்... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகை ஆரம்பித்தது.

அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த அவரது நண்பர் அக் குழந்தையிடம் வந்தார்.

அழுவாதே செல்லம். உங்க அண்ணனுக்கு வேண்டிய மருந்தை நான் வாங்கி தர்ரேன். முதலில் உங்க வீட்டுக்கு போய் உங்க அண்ணனை பார்க்கலாம். அப்புறம் நானே மருந்து கொண்டு வருகிறேன்.... என்று அந்த பெண்ணை கையை பிடித்து அவள் வீட்டுக்கு கூட்டி சென்றார்.
வீட்டில் அவளது அண்ணனை பரிசோதித்த அவர்... அவர்களது பெற்றோர்களிடம் அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அந்த நோயாளி குழந்தையுடன் அதே மருத்துவமனைக்கு சென்று, அக்குழந்தைக்கு சிகிச்சை செய்த டாக்டர்ரிடம்  விவரத்தை கேட்டு அறிந்தார்.
அக் குழந்தைக்கு இருதயத்தில் 5 இடங்களில் block இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு 5 லட்சம் மேல் செலவாகும் என்று டாக்டர் சொல்ல, அதற்க்கு அந்த நண்பர்.....
டாக்டர்.... நானும் ஒரு டாக்டர் தான் இருதய சிகிச்சை நிபுணர். அமெரிக்காவில் ஒரு பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக வேலை செய்கிறேன். விடுப்பில் வந்துள்ளேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இந்த குழந்தையின் அறுவை சிகிச்சையை நான் உங்கள் உதவியுடன் செய்யலாமா???? மருத்துவ செலவை முழுவதும் நானே ஏற்றுக்கொள்கிரேன்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

பெற்றவர்கள் கண்ணீர் மல்க ஆண்டவர் தான் உங்கள் ருபத்தில் வந்து என் குழந்தையை காப்பாற்றினார். என்று கூற
அதற்க்கு மருத்துவர்

இதற்க்கு மூல காரணமே உங்கள் பெண் குழந்தையின் தூய்மையான அன்பு தான் காரணம். டாக்டர் உங்களிடம் ஏதாவது MIRACLE நடந்தால் தான் உண்டு என்று சொன்னதை, குழந்தை அந்த miracle என்ற வார்த்தையை மருந்து தான் என்று நினைத்து என் நண்பனின் மருந்து கடைக்கு வந்தது தான் மூல காரணம்.
எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியும், யார்யாருக்கு, எந்தெந்த  நேரத்தில், எதை கொடுக்க வேண்டும் என்று. அதை இப்பொழுது உங்கள் பெண் மூலமாக கொடுத்துள்ளார்.                        

சிவாய நம!


வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி
தோண்டும்போது சிவலிங்கம் ஒன்றைக்
கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச்
சென்றபோது ”சுடுகாட்டில் கிடைத்ததை நீயே
வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்து
அபிஷேகம் செய்” என்று ஏளனமாக அரசன்
கூறிவிட்டான். இறை வழிபாடு என்றால் என்ன என்று
தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள்
ஏளனமானவை என்பதை அறியாமல், பிணம் எரித்த
சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம்
செய்து வழிபட்டான்ஒருநாள் திடீரெனப் பெய்த
மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும்
கரைந்து விட்டது. சிவலிங்கத்துக்கு 
அபிஷேகம் செய்ய
சாம்பல் இல்லையே என வருந்திய அவனும்
விராட்டிகளை அடுக்கி தீயை மூட்டிவிட்டு தனது
மனைவியிடம் ”நான் இந்த தீயில் விழுகிறேன். என்
உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு
சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்” என்று கூறினான்.
ஆனால் மனைவியோ ”நீங்கள் அப்படி இறந்து விட்டால்
இங்கு வரும் பிணங்கள் சீரழிந்துவிடும், நானே தீயில்
குதிக்கின்றேன்” என்று கூறிக்கொண்டே தீயில்
வீழ்ந்தாள். இருவரது பக்தியிலும் திளைத்த பரமசிவன்
பார்வதியுடன் பிரத்தியட்சமாகி மனைவியை
உயிர்ப்பித்து இருவரையும் முக்தியடைய வைத்தார்.
இதைக் கேட்ட அரசனும் தங்கத்தால் ஆன
சிவலிங்கத்திற்குப் பன்னீர், பஞ்சாமிர்தம் என்றும்
வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்த
எனக்கு காட்சிதராத இறைவன், சுடுகாட்டுச்
சாம்பலையும், பழைய சோற்றையும் கொடுத்தவனுக்கு
மோட்சம் அளித்துள்ளாரே என்று வருந்தினாலும் ’பக்தி’
என்பது ஆடம்பரத்தில் இல்லை அன்பினால் மட்டுமே
மலரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டான்.

சிவாய நம!

Thursday, February 16, 2017

சிலுவையை பற்றிய அரிய உண்மைகள்

இத் தகவல் Oxford பல்கலைக்கழகம் மாணவர் அராய்ச்சியில் வெளியிட்டுள்ள தகவல்,..

சிலுவையை பற்றிய அரிய உண்மைகள்:
"இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவையின்
எடை-150 கிலோ
நீளம்-15 அடி
அகலம்-8 அடி"

சரீரத்தில் அறையப்பட்ட ஆணியின் நீளம்-8 அங்குலம்
அகலம்-3/4 அங்குலம்

இயேசுவை பற்றி:
அவருடைய உயரம்:-
5 அடி 11அங்குலம்
அவருடைய எடை: 85 கிலோ

இயேசுவின் பாடுகளை பற்றி:
"இயேசு கிறிஸ்து நடந்து வந்த போது 3 முறைத் தடுமாறி கீழே விழுந்திருக்கிறார்".

17 மணி நேரம் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டிருக்கிறார்.

அவர் சரீரத்தில் மொத்தம் 5480 காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

அவருடைய முதுகில் ஏறத்தாழ 150 ஆழமான காயங்கள் இருந்தன.

அவருடைய தலையை கிளித்து 17 முட்கள் உள்ளே சென்றன.

அவருடைய உடலில் இருந்து 6.5 லிட்டர் இரத்தம் கசிந்தது.

இயேசு கிறிஸ்துவை எருசலேம் வீதி வழியாக 350 சேவகர்களும், 50 குதிரை வீரர்களும் இழுத்துச் சென்றனர்.

யூத கால அட்டவணையின் படி "அக் அபூர்வே கோன்ஜீதா 785 நிசான் 15 அன்று மரித்தார்; நாம் பின்பற்றும் கால அட்டவணையின்படி கிபி 30 ஆம் ஆண்டு ஏப்ரல்
7 ம் தேதியிலே மரித்தார்.

சிலுவையிலுள்ள INRI எழுத்து லத்தீன் வார்த்தை; அதின் அர்த்தம்;
.
I-IESUS
N-NAZARINE
R-REXO
I-IDONEUS
இவ்வார்த்தையின் பொருள்: "நசரேயனாகிய இயேசு யூதருக்கு ராஜா.


மருத்துவராகிய லூக்கா இயேசு மரித்ததற்கு சான்றிதழ் வழங்கினார்.

Monday, February 6, 2017

பிரம்ம முகூ ர்த்தம்- முழுமையான விளக்கம்சிவமயம் சிவாயநம!

🍋பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன?

 🍋அதன் சிறப்பு என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்

🍋சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு (விடியற் காலை  4.30 மணி முதல்  6.00 மணி வரை உள்ள காலம்)  முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது.

🍋பிரம்ம  முகூர்த்தம் என்பது பிரம்மன் என்றால்  நான்முகனைக் குறிக்கின்றது.

🍋சிவபெருமானின் பெருங்கருணையினால் தான் படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் ( பிரம்மன்)  தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.

🍋பிரம்ம முகூர்த்ததில் திருமணம் செய்வது மேலும்  பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம்  செய்வது போன்ற சுப காரியங்கள் நடைபெற்றால் அங்கு சுபத்தன்மை ஏற்படும்.

🍋 அவ்விடம் எவ்வித அமங்களமும் ஏற்படாது.

🍋 மங்களம் குடிகொள்ளும்

🍋அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுவதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.

🍋காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர்.

🍋இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே ( மரணத்திற்கு ஒத்திகை போன்றது)  சற்றேறக்குறைய மறுபிறவிதானே!

🍋 எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்) என்று சொல்லலாம்.

🍋இத்தொழிலை சிவபெருமானின் பெருங்கருணையால்  செய்பவர் பிரம்மா.

🍋 எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள்.

🍋பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது.

🍋இது எப்போதுமே சுபவேளை தான்.

🍋 இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் ( சிவவழிப்பாட்டைச் செய்வது)  செய்ய வேண்டும்.

🍋 பிறகு நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் உடலும், உள்ளமும் உற்சாகத்துடன் இருக்கும்.

🍋 நாம் தொடங்கும் செயல்கள் எல்லாம்  வெற்றியாகத்தான் இருக்கும்

🍋பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் பூஜை அறையில்  விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்

🍋உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும்.

🍋 இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.

🍋மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது.

🍋இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.

🍋அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள்.

🍋இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

🍋இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள்.

🍋நமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம்.

🍋அவர்களது அபிமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் ( அதிசயத்தையும், அற்புதத்தையும்)  படித்திருக்கின்றோம்.

🍋 அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம்.

🍋இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது

🍋ஆகவே நாம் நம் பெரியோர்கள் வாழ்ந்து காட்டியவாறு நாமும் வாழ்ந்து மற்றோர்களையும் சிவபெருமானின் பெருங்கருணையால் வாழவைத்தும் காட்ட வேண்டும் என்ற உறுதிபாடு பிரம்ம முகூர்த்தத்தில் கட்டாயம் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்று மனம், மொழி, மெய்களால் வாழ்த்தி மகிழ்கிறேன்.

 திருச்சிற்றம்பலம் !

**"பன்னிரு திருமுறைகள்" என்றழைக்கப்படும் மூல தமிழ் வேத நூலில் இருந்து எடுக்கப்பட்டவைகள்.