Wednesday, April 1, 2009

கோயில்களுக்கு ஏற்ற ஆடைகளை உடுத்தவும்

தற்போது கோயில்களுக்கு நிறைய இளைஞர்கள், இளைஞிகள் இறைவனை சேவிக்க வருகின்றனர். 50% பேர் சரியானபடி வேஷ்டியைக் கச்சமாகவோ, ப்ரம்மச்சாரிகளாயிருந்தால் சாதாரணமாகவும் உடுத்திக்கொண்டு வருகிறார்கள். ஸ்த்ரீகள் மடிசார்உடுத்திகொண்டும் இளம்பெண்கள் புடவைகள் உடுத்தியும் வருகிறார்கள்.

மீதமுள்ள 50% தான் சரியான படி தெரிந்துகொள்ளவேண்டியவர்களாயிருக்கிறார்கள்.
Dress Code என்பதை அலுவலகத்திலும் கல்யாண ரிசப்ஷனிலும் சரியானபடி இவர்களால் அனுசரிக்க முடிகிறது(முழு மனதுடன் !). ஆனால் ஆஸ்ரமம், பெருமாள் சன்னிதி போன்றவிடங்களில் வரும்போது மட்டும் ஆடைகள் விஷயத்தில் "LIBERALISATION" எதிர்பார்க்கிறார்கள். வயதில் பெரியவர்கள் சிலரும் இவ்விஷயத்தில் ஏனோதானோ மனோபாவத்துடன் வருவதைக் காணமுடிகிறது.. இதர மதாந்தரஸ்தர்களை அவர்களின் sincere அனுஷ்ட்டானத்துக்காக் பாராட்டும்போது நாமும் கொஞ்சம் சுயப்பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். அடியேனுடைய விஞ்ஞாபனம் :தங்கள் பெண்களையும் பிள்ளைகளையும் ஆச்சார்யர்களை சேவிக்க அழைத்து வரும்போது தகுந்தபடி உடையணியும்படி செய்து அழைத்து வருக. தாங்களும் அவ்வாறே வருக! காலம் மாறிவிட்டது என்று காலத்தின் மீது பழிசுமத்த வேண்டாம்.

No comments:

Post a Comment