Sunday, February 5, 2017

நடந்தே தீரும்



எமதர்மராஜன் ஒரு குருவியை 
வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். 

அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த 
கருடபகவான், 

உடனடியாக அந்தக்குருவியை தூக்கிக் கொண்டு  பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது.

அந்த பொந்தில் வசித்து வந்த ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த குருவியை விழுங்கிவிட்டது. 

குருவியைக் காப்பாற்ற நினைத்து அந்த குருவிக்கே எமனாகி விட்டோமே என்று நினைத்து கருடபகவான், 

குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது.

“நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்றார் எமதர்மராஜன்"

நான் அந்தக் குருவியை உற்று நோக்கக் காரணம், 

"அந்த குருவி சில நொடிகளில் 
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் 
வசித்த ஒரு பாம்பின் வாயால் 
இறக்க நேரிடும்" என எழுதப்பட்டிருந்தது; 

அது எப்படி நிகழப் போகிறது? 
என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன். 

அதற்குள் விதிப்படியே நடந்து விட்டது என்று கூறினார்.

"வாழ்க்கையில் என்ன நடக்கவேண்டுமோ அது நிகழ்ந்தே தீரும். அதனால் அதுகுறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம் என்பதே வாழ்வியல் நீதி!" 



No comments:

Post a Comment